பாரதத்தை அழிக்க வந்துள்ள பெந்தகோஸ்ட் பேய்கள்



கிறிஸ்துவத்தில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. உலகில் கிட்டத்தட்ட 41000 கிறிஸ்துவ பிரிவுகள் இருப்பதாய் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இப்படி பல பிரிவுகள் இருப்பினும் அதில் பெரும்பான்மையாக இருப்பது கத்தோலிக்கர்கள். அதிலும் ரோமன் கத்தோலிக்கர்கள் மிக அதிகமாக உள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற கிறிஸ்துவ அமைப்புகளை ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுதந்திரத்திற்கு பின் மதம் மாறியவர்கள். எனக்கு தெரிந்த வகையில் இவர்கள் இப்போது அதிகமாக மதம் மாற்றுவது இல்லை. அதோடு நம்முடைய‌ இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களை இவர்கள் எதிர்ப்பதும் இல்லை. 

ஆனால் கடந்த சில வருடங்களாக விஷப் பாம்பை விட கொடியதான ஒரு பிரிவு தொற்று வியாதியை போல் பரவி வருகிறது. நாகப் பாம்பை விட கொடிய விஷத்தை அப்பாவி மக்களின் இதயத்தில் விதைக்கும் இந்த கும்பல் இந்திய கலாச்சாரத்தையே புரட்டி போடுவதற்கு கோடாணு கோடிகளை கொட்டி வருகிறது. பாம்பின் விஷம் கடிப்பட்டவர் உடலில் கலந்ததும் அவர் உடனே இறந்து விடுவார், ஆனால் இந்த பெந்தகோஸ்டுகளின் விஷம் ஒருவரின் மூளையில் கலக்க தொடங்கினால் அவரும் ஒரு பாம்பாக மாறி மற்றவர்களை கொட்டத் தொடங்குவார். இது இப்படி பண்முனையில் பரவிக் கொண்டே போகும்.

இரையை விழுங்க பாம்பு பதுங்கி இருப்பதை பார்த்திருக்கிறீர்களா ? பாம்பு பலமான இறைகளை வேட்டையாடுவதில்லை. சக்தி குறைந்த தவளைகள், எலிகள் போன்றவற்றை தான் அவை வேட்டையாடும். அது போல இந்த பெந்தகோஸ்டுகள் அறிவுள்ள படித்த மக்களை, தன் கலாச்சாரத்தை/தர்மத்தை குறித்து நன்கு தெரிந்த மக்களை குறி வைப்பதில்லை. இவர்களின் குறியெல்லாம் அப்பாவிகள், தனிமையில் இருப்பவர்கள், வியாதியில் நொடிந்தவர்கள், ஏழைகள், அன்புக்கு ஏங்குபவர்கள் இப்படியானவர்கள்தான்.

தன் இரையை வேட்டையாடும் வரை பாம்பு அமைதியாக இருக்கும். இரையின் பலவீனங்கள் அதற்கு தெரியும். ஆர்பாட்டமில்லாத ஒரு அமைதியின் முடிவில்தான் இரை வசப்படும். பெந்தகோஸ்டுகளும் அப்படித்தான். அவர்கள் மதமாற்றுவதே ஒரு நுன்னிய கலை. அமேரிக்காவின் வடிவமைக்கப்பட்ட பல மனோதத்துவ முறைகளை, உலகில் மிகத் திறமையாக கையாண்டு அப்பாவி மக்களை வசியப்படுத்துவதே இவர்களின் பிழைப்பு !!

என்ன இவர்களின் சித்தாந்தம் ? என்ன இவர்களின் நோக்கம் ? எங்கிருந்து வந்தன இந்த பெந்தகோஸ்டு விஷ சித்தாந்தம் ? இதற்கு எங்கிருந்து வருகின்றன நிதி ? எப்படி பரப்புகிறார்கள் இவர்கள் ? இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ? இவற்றை இனி இதன் தொடர்ச்சியில் பார்ப்போம்.

இந்தியாவில் நீங்கள் எங்கு சென்றாலும் "ஜெப வீடுகள்" என்கிற சிறு அமைப்புகளை பார்க்கலாம். அதுவும் கடந்து பத்து ஆண்டுகளாக இவை மூலை முடுக்கெல்லாம் பல்கி பரவி வருவதை நீங்கள் பார்க்கலாம். அதிக வீடுகள் இல்லாத குடியிருப்பு பகுதிகளிலும், குடிசை பகுதிகளிலும் இந்த ஜெப வீடுகளை பார்க்கலாம். ரயில் பாதையின் அருகே பயனிகள் பார்க்க கூடிய வகையில் இத்தகைய ஜெப வீடுகள் பலவற்றை நீங்கள் பார்க்கலாம். இவைகள் பல பெயர்களில் இருக்கும். ஆனால் இவை பெரும்பாலும் அமேரிக்க பெந்தகோஸ்ட் குழுமத்தின் ஒரு மிகப்பெரிய திட்டத்தால் அரங்கேற்றப்பட்ட ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு வருடமும் இந்தியர்களை தங்கள் கோட்பாடுகளுக்குள் அடக்கிவிட கிட்டத்தட்ட பத்தாயிரம் கோடி ரூபாய்களை இந்த அமேரிக்க பெந்தகோஸ்ட் குழுமங்கள் செலவிடுவதாய் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றல்ல இரண்டல்ல பத்தாயிரம் கோடி ரூபாய்கள் !! 

அமேரிக்காவை சேர்ந்த பல பெந்தகோஸ்ட் குழுமங்கள் இந்தியாவில் ஆயிரக்கணக்கில் சர்ச்சுகளை விதைக்கும் மிகப்பெரும் ஒரு திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அமேரிக்கர்களால் நேரடியாக இந்தியாவில் இறங்கி இத்தகைய பணிகளை செய்ய இயலாது என்பதால் அவை இந்தியாவில் இதை செய்யக் கூடிய தனிநபர்களை குறிவைக்கின்றன. 

இந்த தனி நபர்கள் முதலில் ஒரு குழுவை தயார் செய்ய வேண்டும். பின்னர் அவர்களுக்கு போதிய நிதி அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தனை நபர்களை மதம் மாற்றம் செய்துள்ளேன் (Baptised) என்று ஆதாரங்களுடன் கூடிய அறிக்கைகளை இவர்கள் சமர்பித்க வேண்டும். மேலும் பலரை மாற்றக்கூடிய சாத்திய கூறுகள் இருப்பதை தெளிவான விபரங்களுடன் தெரிவித்து, இதற்காக சர்ச்சுகள் அமைக்கவும், பல விதமான செலவுகளுக்காகவும், மதமாறுவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கு என்றும் ஒரு நிதி நிலை அறிக்கை தரவேண்டும். இந்தியாவில் உள்ள பல தனிநபர்கள்/குடும்பங்கள் இப்படி அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமத்திடம் இருந்து நிதியை பெறுகிறார்கள்.

உதாரணத்திற்கு "மிஷன் இந்தியா" என்கிற ஒரு அமைப்பு, இந்தியாவில் கோடிக்கணக்கான‌ மக்கள் பரிசுத்த ஆவியை ஏற்பதற்கு தயாராக உள்ளனர், அவர்களுக்கு இறைவனின் நற்செய்தியை வழங்க வேண்டும் என்று தங்கள் ப்ரௌசர்களை (brochure) தயார் செய்து அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமங்களிடம் விண்ண‌ப்பிக்கின்றது.

அதாவது இது "ஏம்வே" (Amway) போன்ற ஒரு "மல்டி லெவல் மார்கெட்டிங்" அமைப்பு. எத்தனை பொருட்கள் விற்கிறார்களோ, அதற்கு ஏற்ப, அடுத்த முறை அதிக பொருட்களை ஏம்வே வழங்குவது போல், எத்தனை மக்களை மதம் மாற்றுகிறார்களோ அதற்கு ஏற்ப நிதி வசதிகளை அமேரிக்க பெந்த கோஸ்ட் குழுமங்கள் செய்து தருகின்றன.

அது சரி, இத்தனை பணத்தை இவை காரணமில்லாமல் அனுப்பி விடுமா ? எதற்காக இத்தனை கோடிகளை அனுப்ப வேண்டும் ? அரசியல் கட்சிகள் எப்படி சுய உதிவி குழுக்களை ஊக்குவித்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களின் நம்பகத்தனமையை பெற முயல்கின்றதோ அதைப் போல் ஆயிரக்கணக்கான இந்த சிறிய சர்ச்சுகளை பெருக்கி அவைகள் மூலம் மொத்த இந்திய மக்களையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வர வைக்கக் கூடிய திட்டமிது. 

"தி பிலீவர்ஸ் சர்ச்" (The Believer's Church) என்று "காச்பல் ஆஃப் ஆசியா (Gospel for Asia (GFA)) என்கிற‌ அமேரிகாவின் டெக்ஸாஸை சேர்ந்த அமைப்பு மட்டும் 596 கோடி ரூபாய்கள் இப்படி இந்தியாவில் சர்ச் அமைப்பதற்காக அனுப்பி உள்ளது. இது இந்தியாவில் இதன் மதப்பரவலுக்காக ஆட்களை தயார் செய்யவும், அவர்களுக்கு போதிய பயிற்சி தரவும் நிதி ஆதாரங்களை ஏற்படுத்தி தருவதோடு, அமேரிக்காவில் இருந்து பிரச்சார யுக்திகளில் தேர்ச்சி பெற்றவர்களை இந்தியாவுக்கு அனுப்பி இங்குள்ள சிறிய‌ சர்ச்சுகளுக்கு உதவுகிறது.

பெருகி வரும் இந்த சிறிய ஜெப வீடுகளால் பாதிக்கப் படுவது ஹிந்துக்கள் மட்டும் அல்ல. பாரம்பரியமாய் இந்தியாவில் பல ஆண்டுகளாய் உள்ள கத்தோலிக்க சர்ச்சுகளும் தான். பஞ்சாபை சேர்ந்த "செய்ன்ட் ஜேம்ஸ் கேத்தலிக் சர்ச்" பெந்தகோஸ்டுக்கு மாறும் கத்தோலிக்கர்களால் ஆளில்லாமல் சமீபத்தில் மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பல கத்தோலிக்க பாதிரியார்கள் இந்த புதிய ஆதிக்கத்தால் நிலை தடுமாறி போயுள்ளனர். தத்துவ அறிவில் பயிற்சி இல்லாமல் மக்களின் உணர்வுகளை மிகையாக தூண்டி அதன் மூலம் ஆதாயம் பெரும் இந்த சூழ்ச்சி முறையை அவர்கள் கண்டிக்கிறார்கள். 

இந்த பெந்த்கோஸ்டு அமைப்புகள் எங்கே எப்படி தொடங்கின ? மேலும் இவை இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன ? இந்திய கலாச்சாரத்தை இவை எவ்வாறு சீரழிக்கின்றன

பாம்பு தன் இறையை கண்டுவிட்டால் அதை விட்டு தன் பார்வையை விலக்காது. இறை எப்போது அசட்டையாக இருக்கும் என்று அது கூர்ந்து நோக்கிக் கொண்டிருக்கும். அதைப் போலவே ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறு குழுமங்களில் முழு நேரமும் பணியாற்றும் பெந்தகோஸ்டை சேர்ந்தவர்கள், எப்போது எங்கே பாரத தர்மத்தை குறித்த விழிப்புணர்வு இல்லாத அப்பாவி மக்கள் சிக்குவார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்பாவி மக்கள் பெரும்பாலும் மருத்துவமனைகளிலோ, பள்ளி மற்றும் கல்லூரிகளிலோ கிடைப்பார்கள். வீடு வீடாய் சென்று வேட்டையாடுகையில் கிடைப்பார்கள். ரயில்களிலோ, பஸ்களிலோ பிரயானம் செய்கையில் கிடைப்பார்கள். அலுவுலங்களில் தனக்கு கீழே பணியாற்றுபவர்களாக இறை கிடைக்க வாய்ப்பிறுக்கிறது. ஏழ்மையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள், ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்கள், தனிமையில் இருப்பவர்கள் இப்படி பலகீனமான இறைகள் வெகு எளிதில் வசப்படும்.

இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் அமேரிக்க பெந்தகோஸ்டு குழுமங்கள் மூலமாக இயக்கப்படும் சிறு சிறு மையங்கள் இதில் ஈடுபடுகின்றன. நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட மனோவசியம் மற்றும் ஆழமான உளவியல் நுட்பங்கள் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இங்கு அங்கு என்று இல்லாதபடி இந்தியா முழுதும் இது நடந்து வருகிறது. அந்நிய செலாவனி பற்றாக்குறையை போக்க விழி பிதுங்கி நிற்கும் இந்திய அரசோ இதைப்பற்றி கவலைப்படாமல் வெளிநாட்டு பணம் உள்ளே வருவதை கண்டு கொள்ளாமல் பாரா முகமாக இருக்கிறது. இந்தியா முழுதும் இந்த மதமாற்றங்கள் கேட்பார் இன்றி நடந்து வருகின்றன.

தில்லியின் புறநகர் பகுதிகளில் புதிய சர்ச்சுகளை அமைக்கும் வேலையை பெந்தகோஸ்ட் குழுமத்தை சேர்ந்த "ராட்ரிக் கில்பர்டும்" அவர் மனைவியும் பார்வையிடுகின்றனர். அவர் தன்னுடைய அமேரிக்க தலைமையகத்துக்கான வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கிறார். அதில் அவர் குறிப்பிடுகிறார் "நாங்கள் பெருகிக் கொண்டே வருகிறோம் இதை யாரும் தடுக்க இயலாது. எங்களின் இலக்குக்கு மேலேயே நாங்கள் வளர்ந்து வருகிறோம். உதாரணத்திற்கு நாங்கள் 2009ம் வருடத்தில் இரண்டயிரம் புதிய சர்ச்சுகளை ஏற்படுத்த நினைத்தோம் ஆனால் "மூவாயிரத்தி நாணூற்றி தொண்ணூறு ஆறு" சர்ச்சுகளை ஏற்படுத்தி விட்டோம், அதைப்போல இருபதாயிரம் பேரையாவது மதமாற்ற வேண்டும் என்று இலக்கு வைத்தோம் ஆனால் 2009ம் வருடத்திலேயே எங்கள் இயக்கம் "முப்பத்தி மூன்று ஆயிரத்தி அறுநூற்றி எழுபத்தி நான்கு" பேரை மதமாற்றியுள்ளது". 

இந்தியாவில் லட்சக்கணக்கில் நடக்கும் மதமாற்றங்களில் இவரின் குழுமம் ஒரு சிறு கிளை அவ்வளவுதான்.

இந்த மதமாற்றங்கள் இந்தியாவில் பல பாகங்கங்களில் நடந்து வருகின்றன. தென் இந்தியாவில் பலவிதமான பிரச்சார யுக்திகளை கையாள்கிறார்கள். சுயசார்புடைய பல சர்ச்சுகள் பல தனிநபர்களாலும், குடும்பங்களாலும் தொடங்கப்படுகிறது, இவர்கள் அமேரிக்க பெந்தகோஸ்டு அமைப்புகளுக்கு நிதி நிலை அறிக்கை தந்து பெருமளவில் பணப்பறிமாற்றம் பெற்றுக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் 2002-03 வாக்கில் "எழுநூற்றி எழுபத்தைந்து" கோடி ரூபாயாக இந்த சுயசார்புடைய சிறிய சிறிய சர்ச்சுகளுக்கு அனுப்பப்பட்டது. இது 2006-07 வாக்கில் அது "இரண்டாயிரத்தி இரு நூற்றி நாற்பத்தி நான்கு" கோடி ரூபாய்களாக பெருகியது. 2010 வாக்கில் இது மட்டும் "நாலாயிரத்தி ஐநூறு" கோடி ரூபாய்களை தாண்டி விட்டன என்கின்றன புள்ளி விவரங்கள். 

நகரங்களில் சென்னைதான் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. 2002-03 வாக்கில் மட்டும் சென்னைக்கு "முன்நூற்றி அறுபத்தி மூன்று" கோடி ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அது 2006-07 வாக்கில் "தொள்ளாயிரத்தி இருபத்தி ஒன்பது" கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2010-11ல் அது "ஆயிரத்தி எட்நூறு" கோடி ரூபாய்களை தாண்டி விட்டன என்கின்றன ஆதார பூர்வமான புள்ளி விவரங்கள்." பால் தினகரன் "மற்றும் "மோஹன் சி லெசரஸ்" போன்றவர்கள்தான் இதில் பெரும் பங்கை பெற்றவர்கள் என்று சொல்லப்படுகிறது. லெசரஸின் பிரச்சாரங்கள் தூத்துக்குடி, கன்னியாக்குமரி மற்றும் திருநெல்வேலியில் பெரும் பொருட்செலவில் அரங்கேறி வருகின்றன.

ஆந்திராவிலோ இந்த சுயசார்புடைய சர்ச்சுகள் பெருகுகின்றன. ஆந்திர முன்னால் முதல்வர் ஒய் எஸ் ஆர் ரெட்டியின் மாப்பிள்ளை "அனில் குமார் ரெட்டி", "அனில் உலக இவாண்ஜிலிஸம்" (Anil World Evangelism) என்கிற பெயரில் அந்த மாநிலம் முழுதும் பலரை மதம் மாற்றியுள்ளது பலருக்கு தெரியாது.

அமேரிக்கா கிறிஸ்துவ மதத்தை பரப்ப துனை போகிறதா ? முட்டாள் தனமாக இருக்கிறதே என்று சில அறிவு ஜீவிகள் பேசக்கூடும். செக்யூலர் தேசம் என்று மார்தட்டிக் கொள்ளும் அமேரிக்காவின் உண்மை முகம் அறியாத அப்பாவிகள் அவர்கள். 

அமேரிக்கர்கள் ஏன் இத்தனை பனம் செலவு செய்ய வேண்டும். எதை சாதிப்பதற்காக அப்பாவி பாமர மக்களை மதம் மாற்றுவதற்காக அவர்கள் பனத்தை மூன்றாம் உலக நாடுகளில் இப்படி கொட்ட வேண்டும் ?

ஆர்மீஸ் ஆப் காட் ( The Armies Of God ) என்கிற புத்தகத்தில், மலேஷியாவில் வாழும் பிரிட்டீஷ் காரரான "இயன் பகனன் ( Iain Buchanan ) இதை குறித்து தோல் உரித்து போடுகிறார்.

எப்படி இந்த வெறி ஊட்டப்பட்ட‌ இவாண்ஜலிஸ்டுகள் இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் முக்கியமாக இந்தியாவில், அமேரிக்காவின் சார்பாக செயல்படுகிறார்கள் என்று அவர் விளக்குகிறார். மற்றும் வெற்றிக்கு வழிகாட்டுபவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் அமேரிக்க மேலான்மை நிபுணர்கள் மறைமுகமாக கிறிஸ்துவ இவாண்ஜிலிஸ்டுகளாக இருப்பதை அவர் விவரிக்கிறார்.

அமேரிக்காவின் ஜனாதிபதிகளான புஷ் ஆகட்டும், ரீகன் ஆகட்டும் மற்ற ஜனாதிபதிகள் ஆகட்டும், தங்களுடைய கொள்கைகளுக்கு பல முறை பைபிள் வசனங்களை மேற்கோள் காட்டி ஆதரவு தேடுவதை அவர் சுட்டி காட்டுகிறார்..

அமேரிக்கா வெளிப்புறத்தில் ஒரு ஜனநாயக நாடு. வெளிப்புறத்தில் பார்க்கையில் அது ஒரு மதசார்பற்ற, காரண அறிவை அதிகம் பயன்படுத்தும் மக்களை கொண்ட ஒரு நாடு. ஆனால் உள்ளார்ந்து பார்த்தோம் என்றால் அது பலம் வாய்ந்த கிறிஸ்துவ இவாண்ஜிலிஸ்ட் அமைப்புகளை கொண்ட நாடு. இந்த இவாண்ஜிலிஸ்ட் அமைப்புகளை பகைத்துக் கொண்டு அங்கு யாரும் ஆட்சியை பிடிப்பது கடிணம். "ஃபெல்லோஷிப் ஃபௌன்டேஷன் ( Fellowship Foundation ) மற்றும் கௌன்சில் ஆப் நேஷனல் பாலிஸி ( Council for National Policy ) ஆகிய கிறிஸ்துவ அமைப்புகள் அமேரிக்க தேசத்தின் கொள்கைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன.

அமேரிக்காவில் 600 இவாண்ஜிலிக்கல் குழுமங்கள் உள்ளன. இதில் உள்ள சில குழுமங்கள் மிகப்பெரியவை, ஒரு பண்ணாட்டு கம்பெனிக்கு ஈடானவை. இந்த குழுமங்களுக்கு இடையே ஒரு நெட்வர்க் மிகச் சீரிய முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவை உலகம் முழுதும் உள்ள கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மேல் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழுமங்கள் பல நாடுகளின் ஊடகங்கள் மற்றும் முக்கிய‌ துறைகளில் ஊடூறுவி உள்ளன. 

மிகப்பெரும் இவாண்ஜிலிக்கள் குழுமங்களான "வர்ல்ட் விஷன், (World Vision) கேம்பஸ் க்ருசேட், (Campus Crusade) யூத் வித் எ மிஷன், (Youth with a Mission) சமாரிடன்ஸ் பர்ஸ் (Samaritan’s Purse) போன்ற குழுமங்கள் அமேரிக்க அரசாங்கத்தின் வெளி நாட்டு கொள்கையில் பெரும் பங்காற்றுகிறது. வர்ல்ட் விஷன் அமேரிக்க "ஸ்டேட் டிபார்ட்மென்டின்" ஒரு அங்கம் என்பது அருமையான உதாரணம். இவாண்ஜிலிஸ்ட் கொள்கைகளை உலகம் முழுதும் பரப்புவதற்கு "பன்னாட்டு மத சுதந்திர சட்டத்தை" (International Religious Freedom Act of 1998) கொண்டு வரவும் இந்த குழுமங்களின் உதவியோடு அமேரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இவாண்ஜிலிக்கல் கிறிஸ்துவத்தை மேலும் பரப்பி தன் ஆளுமையை நிலைநாட்டலாம் என்று அது நினைக்கிறது.

மதரீதியாக மட்டும் இல்லாமல் "நிர்வாக இயல்" என்ற போர்வையிலும் அமேரிக்க இவாண்ஜிலிஸ்டுகள் நுழைகிறார்கள். "லீடர்ஷிப் குருக்கள்" என்கிற பெயரில் தொழிலாள‌ர்களை உற்சாகப்படுத்தும் வல்லுனர்கள் என்கிற போர்வையில் இந்த அமேரிக்க ஏஜன்டுகள் நுழைகிறார்கள். Zig Ziglar, Paul Meyer, Os Hillman, Richard DeVos, John C. Maxwell, Ken Blanchard, ஆகியோர் பல நாடுகளில் ஊடுறுவி உள்ளார்கள் இவர்கள் மேலான்மை வல்லுனர்கள் மட்டும் அல்ல பெந்தகோஸ்டு கிறிஸ்துவ மதத்தை பரப்ப வரும் இவாண்ஜிலிஸ்டுகளும் கூட‌.



பெந்தகோஸ்டுகளை நாம் எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது.  இன்றைய நம் தேசத்தின் மிகப்பெறும் அச்சுறுத்தல் எதுவென்றால் அது "பெந்தகோஸ்டு விஷப்பாம்புகளாய்"தான் நிச்சயம் இருக்கும்.  உங்கள் பிள்ளைகளை, உறவினர்களை,  நண்பர்களை பெந்தகோஸ்டுகளிடம் இருந்து புறந்தள்ளியே இருக்க அறிவுறுத்துங்கள்.   இந்த கொடிய பேய்களை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.  நோய் வருவதற்கு முன் நம்மை தற்காத்துக் கொள்வதுதான் சாலச் சிறந்தது அல்லவா ?  

No comments: