ஒப்பற்ற உபநிஷத்துக்கள்

சனாதன தர்மத்தின் அடையாளமாய் சொல்லப் படுகிற இன்றைய ஹிந்து மதத்தின் பாதை வியக்கத் தக்கது.

அதற்கு முன், அதென்ன சனாதன தர்மம் ? அது என்ன மதமா, மார்கமா ? தானமா ?

"சனாதன" என்றால் அழியாத என்று பொருள். தர்மம் என்பதற்கு நேரிடையாக ஒரு வார்த்தையில் பொருள் சொல்வது கடிணம். எது அனைத்துக்கும் ஆதாரமோ அது என்று பொருள் கொள்ளலாம். ஆக சனாதன தர்மம் என்றால் எது என்றுமே நிலைத்திருந்து அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ளதோ அது என சொல்ல‌லாம்

சுருங்கச் சொன்னால் தர்மம் என்பது எல்லாவற்றையும் தழுவிக்கொள்வது, அதர்மம் என்பது அதற்கு எதிரானது.

நீங்கள் எந்த பெயரிலும் அதை அழைத்துக் கொள்ளலாம், எது இப்பிரபஞ்சத்தில் ஆரம்பமும் முடிவும் இல்லாமல் இருக்கிறதோ, எது எல்லா குருமார்கள் தோன்றுவதற்கும் முன் இருந்ததோ, எது இறைத்தூதர்களை சாராமல் இறைவனை சார்ந்ததோ, எது எல்லாக் காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் உகந்ததோ, எது முழுமையாகவும், பகுதியாகவும் இருக்கிறதோ, எது பார‌பட்சமின்றி எல்லோரையும் தழுவுகிறதோ அது தான் சனாதன தர்மம்.

மதம் என்பது ஒரு நிறுவப்பட்ட ஒரு கட்டமைப்பை குறிக்கிறது, அது ஒரு இறை தூதரையோ அல்லது ஒரு புனித நூலையோ சார்ந்து இருப்பது.  அதன் தோற்றம் ஒரு சரித்திர நிகழ்வை ஒட்டி இருக்கிறது. அதனை தழுவியவர்கள் அம்மதத்தின் நம்பிக்கைக்கு புறம்பாக போவது அம்மதத்தை எதிர்ப்பது போல் ஆகும்.  சுவர்கம் அல்லது இறுதி தீர்ப்பு என்பது அவர்களுக்கு அவர்களின் இறைத்தூதரின் வார்த்தைகளை சார்ந்து இருக்கிறது. இந்த வட்டத்தின் இடையே சிக்கிக் கொண்ட மக்களை, இம்மதங்கள் ஒருவரோடு ஒருவரை பிரிக்கவும், மாற்றவும், எதிர்க்கவும், சகிப்புத்தன்மை இல்லாமலும் செய்து தீர்க்கின்றன. இன்றைய உல‌கில் மதச்சண்டையில் இறந்தவர்கள், போரில் இறந்தவர்களை விட அதிகம்.

சனாதன தர்மமோ, உயிர்கள் அனைத்தையும் சேர்க்கிறது, அரவனைக்கிறது. அதற்கு என்று திட்டவட்டமான சட்டங்கள் இல்லை. எதையும் எதிர்த்து கேள்வி கேட்கும் சுதந்திரத்தை அது தருகிறது. எவருடைய ஆதிக்கத்தையும் அது விரும்பாதது, எதையும் அறிவுச் சுடரால் அலசி ஆராய்கிறது. யாரையுமே சாராதது. யாராலும் பரப்பப்படும் அவசியம் இல்லாதது. சத்தியத்திற்கு எதற்கு விளம்பரம் ? பொய்களுக்கு ஆயிரம் முகம் இருக்கலாம், உண்மைக்கு ஒன்று தானே ?

சரி சனாதன தர்மத்தின் ஆதாரங்கள் யாவை ?

"ப்ரஸ்தணத்ர்யி" என்று சொல்வார்கள். அதாவது மூன்று ஆதாரங்கள். அவை 1) உபநிடந்தங்கள்.2) பிரம்ம சூத்ரம் 3) பகவத் கீதை.

"ப்ரஸ்தணத்ரயி" எனப்படும் மூன்று ஆதாரங்களை, வேதாந்தம் என்று குறிப்பிடுவர். "அந்தம்" என்றால் முடிவு. அதாவது வேதத்தின் முடிவு அல்லது வேதத்தின் அடிப்படை நோக்கம்.

வேதத்தை கர்ம‌ காண்டம் என்றும் உபநிடந்தங்களை ஞான‌ காண்டம் என்றும் சொல்கின்றனர்.

"கர்ம" என்றால் செயல், வேதங்களில் வேள்விகள் ஆகிய செயல்களை புரிந்து தேவர்களை மகிழ்விப்பது முக்கிய பங்காற்றுகிறது. ஞாண காண்டம் என்பது விழிப்புணர்வு சார்ந்தது. இரண்டும் ஒன்றோடொன்று பின்னி பினைந்தது. சில ஆப்ரஹாமிய சிந்தனையாளர்கள், இரண்டையும் தனித்தனியே பிரித்து ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. முக்குன‌ங்களை சார்ந்த இந்த மனித மனம் உடனே பக்குவத்திற்கு வந்து விடாது. செயல்களை பற்றில்லாமல் செய்து வரும்போது ஞானம் என்கிற விழிப்புணர்வு பிறக்கிறது. அதன் பிறகு செயல்கள் இல்லை. அதனால்தான் ஞானத்தை வேதத்தின் முடிவு என்கிறார்கள்.

வேள்விகள் என்றால் ஒரு யாகசாலையில் தீயிட்டு, மந்திரங்களை சொல்லி, தெய்வங்களுக்கு அர்பணிப்பது அல்ல.. வேள்விகள் மானசீகமாக நடத்தப்படுகிறது.  மனது ஒன்றி செய்யப்படும் வேள்விகளே பலனை தருகிறது.  வேள்விகளும் ஒரு வகை தியான‌ம்தான். மனம் ஒன்றாமல் செய்யப்படும் சடங்குகள் வெறும் மண்ணாங்கட்டிகள் தான். வேள்வியில் முக்கிய பங்காற்றுவது தியாகம். நமக்கு பிடித்தவற்றை தியாகம் செய்து நம் எண்ணங்களை தூய்மை படுத்துகிறோம். உண்ணா நோன்பு கூட ஒரு வகை வேள்விதான். தூய்மை அடையும் எண்ணங்களால் நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு, நல்லது நடக்கின்றன.

கர்மம் எனும் செயல் தனக்காக செய்யப்படாமல் அனைவருக்காகவும் செய்யப்படும் போது அது பரிசுத்தமாகிறது. அதனால்தான் வேள்விகள் உலக நன்மைக்காக செய்யப்படுகின்றன. தாமஸ குன‌ம் என்று சொல்லப்படுகிற மந்த நிலையில் இருக்கும் மனம் பற்றற்ற செயல்களால் (வேள்விகளால்) சுத்தமடைந்து விழிப்புணர்வு நிலை (சத்வ குணத்தில்) நிலையை அடைந்து, பின் ஞானமாகிய நிர்குன‌ நிலையை உணர்கிறது.

வேதத்தின் பொருள் சூட்சும வடிவில் இருப்பதால், அதன் உள்ளார்ந்த அர்தத்தை புரிந்து கொள்வது மிகக் கடிணம். வெளிப்புறமாய் வேதங்கள் யாகத்தை பற்றியும், இந்திரன், சோமன், அக்னி போன்ற தேவதைகளை மகிழ்விக்க செய்யப்படும் சடங்குகள் போலவும் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த அர்தங்களை நாம் அறிந்து கொள்வது மிகக் கடின‌ம்.

ஆக வேதத்தின் சாரம் மற்றும் முடிவாகிய வேதாந்தம் வருகிறது.

சிலர் கேட்பதுண்டு, ஞானிகள் சுயநலவாதிகளா ? யாருக்கும் சேவை செய்யாமல் தியானத்திலும், யோகத்திலும் திளைக்கிறார்களே என்று.

ஞானிகளின் வாழ்வே ஒரு வேள்விதான். தன் வாழ்வையே வேள்வியாக்கி இறை சக்தியை தன்னுள் உணர்ந்ததால்தான் அவர்களின் இருப்பே உலகிற்கு நன்மை செய்கிறது.

வேதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் எழுத்து வடிவில் இல்லை. அது தலைமுறை தலைமுறையாக "குரு சிஷ்ய" பாரம்பரியத்தில், மிகச் சிறந்த இலக்கண கோட்பாடுகளின் மூலம் பாதுகாக்கப்பட்டது. பல நூற்றாண்டுகள் பிறகு தான் அவை எழுத்து வடிவம் பெற்றதாய் சொல்லப்படுகிறது.

வேதத்தை படிப்பதற்கு ஆறு சாஸ்திரங்கள் தேவை படுகின்றன

1) வேதாங்கம் 2) கல்பம் 3) வ்யாகரனம் 4) நிருக்தம் 5) ஜ்யோதிடம் 6) சந்தை.

சில அறிஞர்கள் வேதத்தை நான்காக‌ பிரிக்கலாம் என்கிறார்கள். அவை ஸம்ஹிதைகள், ப்ராமணங்கள், ஆரண்யகம் மற்றும் உபநிஷத்துக்கள்.

ஸம்ஹிதைகள் என்பன மந்திரங்களின் தொகுப்பு. காலப்போக்கில் அம்மந்திரங்களின் அர்த்தம் புரிவது மிகவும் கடின‌மாகியது.  ஆகையால் அவைகளுக்கு விவரமான , ஆழமான உரை தேவைப்பட்டது, அவைதான் "ப்ராமன‌ங்கள்" எனப்படுகின்றன. ப்ராமன‌ங்கள் எனும் சொல் "சூட்சும சக்தி" அல்லது "ஆதார சக்தி" என பொருள் படுகிறது, அவை வேள்விகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்று உரைநடையில் விளக்குகின்றன., மந்திரங்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன. ஸம்ஹிதைகளும், ப்ராமணங்களும் "கர்ம காண்டம்" என்று சொல்லப்படுகிறது.

அடுத்து வரும் ஆரண்யகம் என்பன, முனிவர்களும் யோகிகளும் காடுகளில் பல சடங்குகளுக்கு அளித்த தத்துவ ரீதியான விளக்கத்தை அடங்கியது. இவைகள் முற்றும் துறந்து செல்பவர்களுக்காக எழுதப்பட்டது. இது உபாசனை (வணங்குதல் மற்றும் தியானித்தல்) காண்டம் என்று அழைக்கப்படுகிறது.

இறுதியில் வருவது அனைத்துக்கும் முடிவான உபநிடங்கள் என்கிற விலை மதிப்பில்லாத இரத்தின‌ங்கள். தொடக்கத்தில் எழுதியது போல் வேதத்தின் முடிவாக ஞான காண்டமாகிய‌ உபநிடதங்கள் வருகிறது. வேதத்தின் மிக முக்கியமான பகுதி இதுதான். உபநிடந்தங்கள் வேதத்தின் அறிவார்ந்த விடயங்களை விளக்குகிறது.

"உப" என்றால் பக்கத்தில், "நி" என்றால் கீழே, "ஷ‌த்" என்றால் உட்காருதல். ஆத்ம அல்லது ப்ரம்ம ஞானத்தை அறிந்த ஒரு குருவின் பாதங்களில் உட்கார்ந்து அவற்றை உணர்ந்துக் கொள்வதை இது குறிப்பிடுகிறது.

"உத்திஷ்ட ஜாக்ரதா ப்ராப்ய வரன் நிபோததா"
"விழித்திடுங்கள், உறங்கும் மாணுடர்களே, எழுந்திருங்கள்" எனும் கதா உடநிடத்தின் (1.3.14) எனக்கு பிடித்த‌மான‌ வரிகளோடு உபநிடந்தங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கத் தொடங்குவோம்.

உபநிடதங்கள் நூற்றுக்கு மேற்பட்டவைகளாக இருப்பினும், பத்து மட்டுமே மிகவும் முக்கியமாக தத்துவ ஞானிகளாலும், உரை ஆசிரியர்களாலும் கருதப்படுகிறது. உபநிடந்தங்களுக்கு ஆசாரியர்கள் எனப்படும் ஆண்மீக அறிஞர்கள் பலர் உரை எழுதியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் ஆதிசங்கரர், ஸ்ரீமத் இராமானுஜர், மத்வாச்சாரியர், நிம்பர்கர் மற்றும் வல்லபர்.

அவை, ஆய்த்ரேய உபநிடதம் (ரிக் வேதம்),
சாந்தோக்'ய மற்றும் கேன‌ உபநிடதங்கள் (ஸாம வேதம்)
கதா மற்றும் தைத்ரிய உபநிடதங்கள் (க்ருஷ்ண யஜுர் வேதம்),
ஈஷா மற்றும் ப்ருஹத் ஆரண்யக உபநிடதங்கள் (சுக்ல யஜுர் வேதம்),
மௌன்டுக்ய, முண்டக மற்றும் ப்ரஷ்ண உபநிடதங்கள் (அதர்வண வேதம்)

ஆகியன ஆகும்.

சனாதன தர்மத்தின் ஆதாரமான கோட்பாடுகளான "கர்மா" எனும் செயல், "சம்சாரா" எனும் பிறவி பெருங்கடல், "மோக்ஷம் எனும் வீடுபேரு, "ஆத்மா" மற்றும் "ப்ரஹ்மண்" எனும் ஆதாரமான பரம்பொருள் ஆகியவற்றிற்கு அடிப்படை விளக்கங்களை உபநிஷத்துக்கள் தருகின்றன. வேதத்தின் கூறுகளான "தன்னை அறிதல்", "யோகா" மற்றும் "தியானம்" ஆகியவற்றையும் அவை உள்ளடக்கியுள்ளன. மனித மற்றும் பிரபஞ்ச அறிவின் சிகரம்தான் உபநிடந்தங்கள். அவைகள் ஆன்மீக அனுபவங்களை தருவதோடு மட்டுமில்லாமல், விவாதங்களோடு கூடிய தத்துவ விளக்க்த்தோடு அதை தந்திருக்கிறார்கள். ஒருவர் தன் சொந்த முயற்சியாலேயே உண்மையை அறிய முடியும் என்பதை அது ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது.

உபநிஷத்துக்களை யார் எழுதினார்கள் ?

பல ஞானிகள் மற்றும் முக்தி அடைந்த குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு முக்தி அடைய சொல்லப்பட்டதுதான் உபநிடந்தங்கள். உபநிடந்தங்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் " யாக்ஞ்வல்கியர்". அவர்தான் "நீதி-நீதி எனும் தத்துவத்தை முன் மொழிந்தார். அதாவது உண்மையை, நம் எண்ணங்களை மறுப்பது அல்லது துறப்பதன் மூலமாய் அறிவது. ஷாண்டில்யா, ஐத்ரேயா, பிப்பாலதா, சனத் குமாரா, ஸ்வேதகேது மற்றும் வேத வித்துகள் ஆன மனு, ப்ருஹஸ்பதி, நாரதர், ஆயஸ்யா ஆகியோரும் உபநிடந்தங்களில் பங்காற்றி உள்ளனர்.

உபநிடந்தங்களை புரிந்துக் கொள்வது மிக கடிணமாக இருக்கிறது. அவைகள் ஒருவரின் அல்லது ஒரு சமுகத்தை பற்றிய கதையை சொல்வதில்லை. எங்கோ, எப்போதோ நடந்த சம்பவங்களை பற்றி அவை பேசுவதில்லை. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் பற்றியும் அவைகள் பேசுவதில்லை.

அனைத்திலும் மேலான, அனைத்திலும் சிறப்பான, காரண அறிவால் புரிந்துக் கொள்ள முடியாத‌ ஆத்ம ஞானத்தை குறித்து அது போதிக்கிறது.  இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் படித்து தெளிய வேண்டிய ஒப்பற்ற பொக்கிஷம் உபநிஷத்துக்கள்.

3 comments:

Sriram said...

super. looking forward more blogs on Upanishads.

Unknown said...

Awesome sir!!! keep up your great work!!!!

Unknown said...

நல்ல கருத்து